வம்சம் சீரியலில் பூமிகாவாக நடித்த நடிகையா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
வம்சம் சீரியல்
செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சந்தியா ஜகர்லமுடி.
அதன்பின் சன் டிவியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற சீரியல் மூலம் பரீட்சயமான இவர் ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
இந்த தொடரில் மலைவாழ் பெண்ணாக சந்தியா கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருந்தார் என்றே சொல்லலாம். பின் தமிழ், தெலுங்கு தொடர்களில் நடித்துவந்த இவர் கடைசியாக சந்திரலேகா என்ற தொடரில் நடித்தார்.
நடிப்பை தாண்டி இவர் தெரு நாய்களை பாதுகாப்பதை முக்கிய வேலையாக பார்த்து வந்தார்.

புதிய தொடர்
ஜீ தமிழில் புதியதாக ஒளிபரப்பாக இருக்கும் புது தொடர் சந்தியா ராகம். ஜானகி-சந்தியா என்ற இரு சகோதரிகள் இருக்கிறார்கள், அவர்களை சுற்றிய கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
தற்போது இந்த தொடரில் வம்சம் சீரியல் புகழ் சந்தியா நடிக்க வந்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரை திரையில் ரசிகர்கள் காண அட இவரா என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri