தளபதி66 பற்றி பேசவே பயமா இருக்கு: மேடையில் கூறிய இயக்குனர் வம்சி!
பீஸ்ட் படத்திற்கு அடுத்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
பீஸ்ட் நெகடிவ் ரெஸ்பான்ஸ்
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன பீஸ்ட் படத்திற்கு தற்போது நெகடிவ் ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து இருக்கிறது. படம் எதிர்பார்ப்பை சுத்தமாக பூர்த்தி செய்யவில்லை என ரசிகர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கேஜிஎப் 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் பீஸ்ட் படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

பேச பயமா இருக்கு: வம்சி
இந்நிலையில் விஜய் அடுத்து நடித்து வரும் தளபதி 66 படத்தினை இயக்கி வருகிறார் வம்சி. இவர் கார்த்தி - நாகார்ஜூனா நடித்த தோழா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். மேடையில் அவர் பேசியபோது தளபதி 66 பற்றி கேட்டிருக்கின்றனர். அதற்கு பதில் சொன்ன அவர் "இப்போ பேசுவதற்கு ரொம்ப பயமாக இருக்கு, நான் எதுவும் சொல்லப்போவது இல்லை. முதல் schedule முடித்திருக்கிறோம், இரண்டாம் schedule விரைவில் தொடங்க இருக்கிறது. ஒரு சிறந்த படத்தை தர முடியும் என உறுதியாக சொல்கிறேன்" என அவர் கூறி உள்ளார்.
பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு ரஜினி கொடுத்த ரியாக்ஷன் ! அமையுமா நெல்சன் - சூப்பர் ஸ்டார் கூட்டணி..