தளபதி 66 படம் குறித்து விருது விழாவில் பேசிய இயக்குனர்- அடுத்த அப்டேட் எப்போது?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த வருட ஆரம்பத்தில் படு மாஸாக திரையரங்கில் வெளியான திரைப்படம் விஜய்யின் மாஸ்டர். படம் கடந்த வருடமே ரிலீஸ் ஆக வேண்டியது, ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக வெளியாகவில்லை.
அப்படத்தின் ரிலீஸை தொடர்ந்து விஜய் தனது 65வது பட அறிவிப்பையும் அறிவித்தார். அதில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது அடுத்த படம் என உறுதிப்படுத்தினார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பும் ஓரளவிற்கு முடிந்துள்ளதாக தெரிகிறது. விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம.
இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்றாலும் சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அண்மையில் இயக்குனர் வம்சி SIIMA விருது விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் புதிய படம் குறித்து கேட்க, உங்களுக்கு விரைவில் ஒரு சூப்பரான அறிவிப்பு வரும் என கூறியுள்ளார்.
"You'll know because there's an announcement that's gonna come SOON." - Director #VamshiPaidipally #Thalapathy66 @actorvijay @directorvamshi @SVC_official @Jagadishbliss #விஜய்66 #தளபதி66 pic.twitter.com/2FYK7RUzkh
— #Thalapathy66 (@Vijay66OfficiaI) September 19, 2021
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri