ஹெச் வினோத், லோகேஷ் கிட்ட இருந்து கத்துக்கோங்க..வம்சியை விளாசிய ரசிகர்கள்
வம்சி
தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வம்சி. இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படமும் பட்டிதொட்டியெங்கும் கலக்கி வருகிறது.
இந்நிலையில் வம்சி பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது தொகுப்பாளர் அவரிடம், 'வாரிசு படத்திற்கு வரும் எதிர்மறை விமர்சனங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்' என கேட்டார். அதற்கு அவர், " படம் எடுப்பது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. ஒரு படத்தை எடுத்து முடிக்க எவ்ளோ கஷ்டம் தெரியுமா?
படத்தில் எத்தனை பேர் அவர்களின் உழைப்பை கொடுக்கிறார்கள் என்று தெரியுமா? படத்தை உருவாக்குவது ஒன்றும் ஜோக் கிடையாது. படத்திற்காக பல பிலிம் மேக்கர்ஸ் தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்கிறார்கள்" என்று கோபமாக பதில் அளித்துள்ளார்.
ஹெச் வினோத்
இதற்கு முன்பு இது போன்ற கேள்வியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஹெச் வினோதிடமும் கேட்டுள்ளனர்.
அப்போது ஹெச் வினோத், " நாம் படத்தில் கஷ்டபட்டு உழைக்கிறோம் என்று எனக்கும் மற்றவர்களிடம் சொல்லணும் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இதை விட பலரும் கஷ்டப்படுகிறார்கள் " என்று கூறியிருந்தார்.
லோகேஷ் கனகராஜ்
இதை போன்று லோகேஷ் கனகராஜ் வேறொரு பேட்டியில் " நாம் எவ்ளோ தான் படத்தில் கஷ்டப்பட்டாலும். கடைசியில் கோடியில் சம்பளம் வாங்குகிறோம். ஆனாலும் பாவப்பட்ட மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் குறைவான சம்பளத்தை வைத்து கொண்டு படம் பார்க்க வருகிறார்கள். இதனால் நம்மளுடைய உழைப்பை காட்டிலும் அவர்களின் உழைப்பே பெரிது" என்று கூறினார்.
வம்சியின் கோபமான பேச்சுக்கு ரசிகர்கள், " நீங்கள் எப்படி பேச வேண்டும் என்று ஹெச் வினோத், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளனர்.
3 லட்சம் எடுத்த கதிரவன் பிக்பாஸில் 100 நாட்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

53 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 16 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu

இரும்பு கம்பியால் 24 முறை சூடு வைத்ததால் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு...! - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu
