தளபதி 66 இப்படிப்பட்ட படமாக தான் இருக்கும்.. இயக்குனர் வம்சி ஓபன் டாக்
தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்னும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை முடித்துவிட்டு வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் தனது 66வது படத்தில் நடிக்க போகிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மகேஷ் பாபுவின் மகள் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
அதே போல் மற்றொரு புறம் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கமிட்டாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் வம்சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி 66 படம் குறித்து ஓப்பனாக பேசியுள்ளாராம்.
இதில், ' தளபதி 66 படம் அரசியல் படமாக இருக்காது. இது எமோஷனல் ஆன ஒரு படமாக இருக்கும். வரும் டிசம்பர் மாதம் படத்தின் அப்டேட் வெளியாகும் ' என்று தெரிவித்துள்ளாராம்.