தளபதி 66 விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள பாலிவுட் இளம் நடிகை! யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுள் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். அதிகபட்ச ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் என்னும் புகழுக்கும் சொந்தக்காரர்.
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் விஜயிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார், லோகேஷ் கணகராஜ் இயக்கியிருந்தார்.
படம் வெற்றியடைந்த நிலையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.பீஸ்ட் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கிறார்.
இதனிடையில் விஜயின் 66-வது படத்தை வம்சி இயக்க உள்ளார் என்னும் செய்தி ஏற்கனவே வெளிவந்த நிலையில் படத்தில் ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வந்தது.
தற்பொழுது வம்சி இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியார ஆத்வாணி நடிக்க உள்ளதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
கியாரா ஏற்கனவே ஹிந்தி தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இவருக்கு இதுவே முதல் படமாக அமையும். இருபினும் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri