வெந்து தணிந்தது காடு திரைப்படம் இப்படி தான் இருக்குமா? முக்கிய நபர் கூறிய தகவல்
நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாக உள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரியளவில் பேசப்பட்டது. மேலும் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் நேற்று திருச்செந்தூரில் தொடங்கியுள்ளது.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இப்படம் குறித்து பேசும்போது, "வெந்து தணிந்தது காடு' படம் இதுவரை சிம்பு செய்திராதது. அவரது நடிப்பின் மொத்த பரிணாமத்தையும் வெளிப்படுத்தும் படைப்பாக இருக்கும். இயக்குநர் கவுதம் மேனன் இப்படத்தின் கதையை பற்றி என்னிடம் கூறும்போது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.
மேலும் 100 சதவீதம் தலைப்புக்கு நியாயம் செய்யும் படைப்பாக இப்படம் இருக்கும். ஜெயமோகன் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். ஒரு சிறந்த ஆக்சன் படமாக, கிராமம் மற்றும் நகர பின்னணியில் கதை நடைபெறும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது " என தெரிவித்துள்ளார்.