4 நாட்களில் வணங்கான் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
வணங்கான்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வணங்கான்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மேலும் ஜி.வி. பிரகாஷ் பாடல்களுக்கு இசையமைக்க, சாம் சி எஸ் பின்னணி இசையமைத்திருந்தார்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் வணங்கான் படம் வசூலில் சக்கபோடு போட்டு வருகிறது.
வசூல்
முதல் நாளில் இருந்தே நல்ல வசூலை ஈட்டி வரும் வணங்கான் திரைப்படம் நான்கு நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நான்கு நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 5.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
