5 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
வணங்கான்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது வணங்கான் திரைப்படம்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய்யின் நடிப்பு வித்தியாசமாக இருந்தது. மேலும் மாற்றுத்திறனாளியாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் சொந்தமாக்கியுள்ளார்.
இவருடைய நடிப்பை பார்த்த பல திரையுலக நட்சத்திரங்களும் தங்களது பாராட்டுகளை கூறினார்கள். மேலும் இப்படத்தில் நடித்திருந்த அறிமுக நடிகைகள் ரோஷினி மற்றும் ரிதா ஆகியோர் நடிப்பும் பாராட்டப்பட்டது.
வசூல்
இந்த நிலையில், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வரும் வணங்கான் திரைப்படம் உலகளவில் 5 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 6.5 கோடி வசூல் செய்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
