வானத்தை போல திரைப்படத்தில நடிகர் விஜயகாந்திற்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்த நடிகை ! மீனா கிடையாதா?

By Jeeva Jul 16, 2022 06:30 AM GMT
Report

விஜயகாந்திற்கு ஜோடி இவரா

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வானத்தை போல.

விஜயகாந்த் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தில் அவருடன் பிரபு தேவா, மீனா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, அஞ்சு அரவிந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தனது தம்பிகளுக்காக அண்ணன் செய்யும் தியாகங்கள் குறித்து சொல்லப்பட்ட இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மெகா ஹிட்டானது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் வசூலை குவித்தது.

அப்படியான இப்படத்தில் நடிகை மீனா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வானதே நடிகை ரோஜா தான். ஆனால் அதற்கு முந்தைய விக்ரமன் திரைப்படத்திலும் நடிகை ரோஜா கதாநாயகியாக நடித்தார்.

இதனால் இப்படத்திலும் அதே சாயல் வந்துவிடும் என்பதால் நடிகை ரோஜாவிற்கு நோ சொல்லிவிட்டதாம் தயாரிப்பு நிறுவனம். இதனை விக்ரமன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

வானத்தை போல திரைப்படத்தில நடிகர் விஜயகாந்திற்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்த நடிகை ! மீனா கிடையாதா? | Vanathai Pola Movie Actress First Choice

விக்ரம் பட பாடலுடன் வெறிதனமான வொர்க் அவுட்டில் இறங்கிய சூப்பர் சிங்கர் பிரகதி !

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US