சன் டிவியின் வானத்தைப் போல சீரியல் நடிகருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது- அழகிய ஜோடியின் போட்டோ
வானத்தைப் போல
சன் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று வானத்தைப் போல.
அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட வரும் இந்த தொடர் பலதரப்பட்ட ரசிகர்களைக் கொண்டுள்ளது. அவ்வப்போது TRPயிலும் தொடர் டாப்பில் வருகிறது.
இந்த தொடரில் சின்ராசுவாக நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார்.
நடிகரின் நிச்சயதார்த்தம்
நடிகர் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்துவரும் அஸ்வின் கார்த்தி நீண்டகாலமாக காயத்ரி என்பவரை காதலித்து வருகிறார், இவர் ஒப்பனை கலைஞராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் ஜோடியாக எடுத்த புகைப்பங்கள் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாக செப்டம்பர் 17ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அஸ்வின் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.