சன் டிவி வானத்தை போல சீரியல் நடிகருக்கு அவரது காதலியுடன் திருமணம் முடிந்தது- அழகிய ஜோடி
சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் தான். இவர்கள் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து ஏகப்பட்ட தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். நிறைய சாதனைகள் செய்த தொடர்களை கொடுத்த பெருமை சன் தொலைக்காட்சிக்கு உள்ளது.
இப்போது காலை 10 மணிக்கு ஆரம்பித்து இடையில் 3 மணி நேரம் படம் அதைத்தாண்டி இரவு 10 மணி படம் சீரியல்கள் தான். மாலை நேரத்தில் வெற்றிகரமாக ஓடும் தொடர்களில் ஒன்று வானத்தை போல, அண்ணன்-தங்கையின் பாசத்தை உணர்த்தும் இந்த தொடரில் அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.
நடிகரின் திருமணம்
இந்த தொடரில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அஷ்வின் கார்த்தி. ஆர்ஜேவாக தனது கேரியரை ஆரம்பித்து இன்று சீரியல்களில் முக்கிய நடிகராக நடித்து வருகிறார்.
இவர் தனது காதலியான காயத்ரி என்பவருடன் அண்மையில் நிச்சதார்த்தம் செய்து முடித்தார், தற்போது இந்த ஜோடிக்கு திருமணமும் நடந்து முடிந்துள்ளது. அவர்களின் திருமண புகைப்படம் வெளியாக ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.