என்ன செருப்பால அடி.. பாண்டியனை விட்டு பிரிந்த வானதி.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல்
சேரன், நிலா மற்றும் சோழன் மூவரும் பீகாருக்கு சென்றிருந்தபோது, பாண்டியன் மற்றும் பல்லவனை வானதி பார்த்துக்கொண்டார். அதுவும் காலை, மாலை என தொடர்ந்து வீட்டிற்கு வந்து சமைத்து கொடுத்தார். ஆனால், வானதி சமையல் சுமாராக இருந்ததால், பாண்டியனும், பல்லவனும் பொறுத்துக்கொண்டு சாப்பிட்டனர்.

பீகாரில் இருந்து சேரன், நிலா, சோழன் வீட்டிற்கு திரும்ப வந்த நிலையில், வானதி சமைத்தது நன்றாகவே இல்லை, வாயில் கூட வைக்க முடியவில்லை என பல்லவன் கூறினார். இதை கேட்டு அனைவரும் சிரித்தனர். இதனால் வானதி மனமுடைந்துபோனார். பாண்டியன் கூட தனக்கு துணையாக நிற்கவில்லை என கவலைப்பட்டார்.

பிரிந்து சென்ற வானதி
இந்த நிலையில், பாண்டியனின் மெக்கானிக் கடைக்கு வரும் வானதி கோபமாக இருப்பதை பார்த்து எதற்காக கோபமாக இருக்கிறாய் என பாண்டியன் கேட்க, பல்லவன் பேசியது தனக்கு மிகவும் வலியை கொடுத்தது, நான் டார்ச்சர் செய்ததாக அவன் கூறினான் என வானதி கூற, 'இதற்காகவா கோபமாக இருக்கிறாய்' என சொல்லி சிரிக்கிறார். இதனால் மேலும் கோபமடைகிறார் வானதி.

ஒரு கட்டத்தில் பாண்டியன் தன்னை பற்றி யோசிப்பதே இல்லை என 'இனி என்னுடைய டார்ச்சர் உனக்கு இருக்காது, நான் இனி உன்னை தேடி வர மாட்டேன், நீயும் என்னை தேடி வராதே. இனி இந்த வானதியிடம் இருந்து கால், மெசேஜ் எதுவும் வராது. நான் மறுபடியும் உன்னை தேடி வந்தால் என்னை செருப்பால் அடி" என கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார் வானதி.