கிசுகிசு-னா ஜாலி தான்.. ஓப்பனாக பேசிய நடிகை வாணி போஜன்
வாணி போஜன்
தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் வாணி போஜன்.
சீரியலுக்கு பிறகு அசத்தல் சுட்டீஸ் மற்றும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார்.

இதன்பின் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக நடித்து தமிழில் வெளியான திரைப்படம் தான் ஓ மை கடவுளே.
இதனை தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வரும் வாணி போஜன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதில் " நடிக்க வந்தால் கண்டிப்பாக கிசுகிசுக்கள் எழுமே " என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

கிசுகிசு ஜாலி தான்
இதற்கு பதிலளித்த வாணி போஜன் " நான் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.. கிசுகிசு வந்தால் ஜாலியாக எடுத்துக்கொள்வேன். முதல் முறை வந்தபோது, கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. மேலும் தற்போது வீட்டில் கூட சொல்லிவிட்டேன். கிசுகிசு வந்தால் வருத்தப்பட வேண்டாம் என்று " என கூறியுள்ளார்.
இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த ஆல்யா மானசா! குவியும் வாழ்த்துகள்..