கிளாமர் லுக்கில் கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட வாணி போஜன்.. வைரலாகும் போட்டோஸ்
வாணி போஜன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் வாணி போஜன். ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார்.
இப்படத்திற்கு முன் இவர் சில படங்களில் நடித்திருந்தாலும், ஓ மை கடவுளே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாணி போஜனுக்கு ஏற்படுத்தி கொடுத்தது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கலம் எனும் வெப் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். அடுத்ததாக பாயும் ஔி நீ எனக்கு, லவ், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
வைரல் போட்டோஸ்
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் வாணி போஜன். இவர் தற்போது தன்னுடைய விடுமுறையை இந்தோனேஷியாவில் கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில், அங்கிருந்து கடற்கரையில் கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாணி போஜன் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
பிரபல நடிகர் அப்பாஸ் வெளிநாட்டில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?.. வெளியன புதிய தகவல்!