இவளெல்லாம் மேனஜரான்னு சொல்லி.. நடிகை வாணி போஜனுக்கு நடந்த சோகம்

By Bhavya Nov 27, 2024 10:20 AM GMT
Report

 வாணி போஜன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரை ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வந்தனர். தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.

இவளெல்லாம் மேனஜரான்னு சொல்லி.. நடிகை வாணி போஜனுக்கு நடந்த சோகம் | Vani Bhojan Share Some Secrets

அதன் பின், படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களையும் சம்பாதித்து உள்ளார்.

அதிர்ச்சியளிக்கும் விஷயம் 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் சீரியலில் வந்தது எப்படி என்பதை குறித்து வாணி போஜன் மனம் திறந்துள்ளார். அதில், " ஒரு தனியார் ஏர்லைனில் சூப்பர் வைசராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

இதுவரை வெளிநாட்டு ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வரும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2.. மொத்த கலெக்ஷன்

இதுவரை வெளிநாட்டு ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வரும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2.. மொத்த கலெக்ஷன்

நான் பெரிதாக படிக்கவில்லை என்பதால் டிகிரி எதுவும் வாங்கவில்லை. ஆனால் நான் அனைவரிடமும் நன்றாக பேசுவேன் அது மக்களுக்கு மிகவும் பிடித்தது.

இவளெல்லாம் மேனஜரான்னு சொல்லி.. நடிகை வாணி போஜனுக்கு நடந்த சோகம் | Vani Bhojan Share Some Secrets

அதனால் வேலையில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் புரோமோஷன் வாங்கி விட்டேன். அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தது. அப்போது எனக்கு மற்றொரு ஏர்லைனில் இருந்து மேனஜர் பதவிக்கான ஆஃபர் வந்தது.

அந்த பணிக்கு நான் உறுதியும் செய்யப்பட்டேன். ஆனால், அப்போது அங்கு பணி புரியும் நபர் ஒருவர் எனக்கு டிகிரி இல்லை என்பதை சுட்டி காட்டி வேலை கொடுக்க கூடாது என்று கூறி விட்டார்.

இவளெல்லாம் மேனஜரான்னு சொல்லி.. நடிகை வாணி போஜனுக்கு நடந்த சோகம் | Vani Bhojan Share Some Secrets

அதன் பின், ஒரு வருடம் எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருந்தேன். அப்போது, முதன் முதலாக தனியார் ஜவுளிக்கடை ஒன்றுக்கு மாடலாக சென்றேன். அப்படி படிப்படியாக சீரியல் பக்கம் வந்தேன்" என்று கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US