காபிக்காக எல்லைமீறிய வனிதா.. நோஸ்கட் கொடுத்த அபிராமி! பிபி அல்டிமேட் லேட்டஸ்ட் ப்ரோமோ
பிக் பாஸ் வீட்டில் டீ மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது, எனக்கு காபி வேண்டும் என சொல்லி வனிதா முதல் நாளில் இருந்தே கேட்டு வருகிறார். வீட்டில் இருந்த டீ தூளையும் எடுத்து அவர் ஒளித்து வைத்துவிட்டார். அதனால் மற்ற போட்டியாளர்கள் செம கடுப்பாகி வனிதாவை திட்டி வந்தனர்.
இந்நிலையில் இன்று லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் முடிவடைந்த நிலையில் போட்டியாளர்கள் காபி தூள் வாங்கி இருக்கின்றனர். அதை டப்பா உடன் வனிதா எடுத்து சென்று தன் பெட்டில் வைத்துக்கொள்கிறார், மற்றவர்கள் மிச்ச மீதி இருந்தால் கொஞ்சம் எடுத்துக்கொள்ளுங்கள் என ஏளனமாக கூறிவிட்டு போகிறார்.
அபிராமி தனக்கு காபி வேண்டும் என சொல்லி வணிதாவிடம் சென்று சண்டை போடுகிறார். இது உங்க பர்சனல் ப்ராப்பர்டி இல்லை என சொல்லி அவர் கேட்க, வனிதா அந்த காபி தூளை தொட மாட்டேன் என சொல்லி தூக்கி வீசிவிட்டு இருக்கிறார்.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day4 #Promo2 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/xeCaUjsrF4
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 3, 2022