என்னை வற்புறுத்தி அப்படி ஒரு விஷயம் செய்ய சொன்னார்கள், ஆனால்.. - அதிரடியாக கூறிய வனிதா
நடிகை வனிதா, பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு எல்லோராலும் பேசப்பட்டார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என தொடர்ந்து விஜய் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.
கடைசியாக பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். ஆனால் சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறினார், காரணம் சரியான மரியாதை இல்லை என்றார்.
தற்போது இதுகுறித்து வனிதா கூறுகையில், " குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளர், காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளேன்.
நான் எப்படி இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக வர முடியும் என வனிதா கூற, பிபி ஜோடிகள் குழு அவரை வற்புறுத்தி போட்டியிட வைத்துள்ளனர்.
சரி என்று நடனம் ஆடினால் சரியான மரியாதை இல்லை. எனவே தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் என கூறியுள்ளார்.