ஜோவிகா காதலிக்க மாட்டாள், நல்ல வேளை காலேஜுக்கு அனுப்பவில்லை.. வனிதா ஓபன் டாக்
வனிதா விஜயகுமார்
பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து உடனே காணாமல் போனார்.
அதன் பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து ஆக்டீவாக சினிமாவில் பயணித்து வருகிறார்.
வனிதா தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' என்ற படத்தை இயக்கி உள்ளார்.

ஓபன் டாக்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தன் மகள் மற்றும் காதல் குறித்து அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " என் மகள் லவ் பண்ணவே மாட்டா, காதல் வலி குறித்து என் வாழ்க்கையின் மூலம் அவள் கற்று கொண்டால் அதனால் என் மகள் காதல் விஷயத்தில் கவனமாக இருப்பார்.
எப்போதும் எனக்கு அட்வைஸ் செய்து கொண்டு இருப்பா. நல்ல வேளை என் மகளை காலேஜுக்கு அனுப்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri