பிக் பாஸ் என்ன ஜெயிலா.. இந்த வாரமே வெளியே போறேன்: கொந்தளித்த வனிதா
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக வந்திருக்கும் வனிதா தற்போது பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து இருக்கிறார். தனக்கு காபி வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகிறார் அவர். அது தரப்படாததால் டீ தூளை எடுத்து அவர் ஒளித்து வைத்துவிட்டார். இதனால் அவருடன் தற்போது சண்டை போட்டு வருகின்றனர் மற்ற போட்டியாளர்கள்.
இந்நிலையில் தற்போது தனக்கு காபி தூள் தரப்படவில்லை என்றால் பிக் பாஸ் ஷோவை விட்டு போகவும் தயார் என கூறி இருக்கிறார் அவர். "இது என்ன ஜெயிலா. சுத்தமா responsibility இல்லை. நான் கடுப்பானால் இந்த வாரம் போய்விடுவேன்" என அவர் தெரிவித்து இருக்கிறார்.
இருக்கும் படங்களை விட்டுவிட்டு பிபி அல்டிமேட் இறுதி நாள் வரை இருக்கலாம் என்கிற நினைப்புடன் தான் ஷோவுக்கு வந்தேன், ஆனால் தற்போது அது மாறிவிடும் போல இருக்கிறது எனவும் கோபத்துடன் தெரிவித்து இருக்கிறார்.