வனிதா நீங்க பிக் பாஸ் ஓனர் இல்லை, ஹவுஸ் மேட் தான்! வனிதாவுக்கு நோஸ்கட்.. முதல் நாளே சண்டை
பிக் பாஸ் ஷோவில் இதுவரை முடிந்திருக்கும் ஐந்து சீசன்களில் அதிகம் சர்ச்சைகளை ஏற்படுத்திய போட்டியாளர்களை ஒன்று சேர்த்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி ஷோ தொடங்கப்பட்டு இருக்கிறது.
நேற்று துவக்க விழா நடைபெற்று போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். வீட்டுக்குள் என்ன நடக்கிறது என ரசிகர்கள் 24 மணி நேரமும் பார்க்கலாம். இந்நிலையில் இன்று முதல் நாளே போட்டியாளர்களா நடுவில் பிரச்சனை தொடங்கி இருக்கிறது.
முதல் டாஸ்கில் வனிதா கோபித்துக்கொண்டு வெளியில் சென்றுவிட அதன் பின் மீண்டும் நான் கேமுக்கு வருகிறேன் என சொல்லி வருகிறார். ஆனால் ஷாரிக் அதை அனுமதிக்கமாட்டேன் என சொல்கிறார். உடனே வனிதா கொந்தளித்து கத்த, 'இது உங்கசொந்த வீடுனு நெனைச்சிக்கிட்டிங்க. நீங்க ஓனர் இல்லை, ஹவுஸ்மேட் தான்' என பாலாஜி முருகதாஸ் கூறி நோஸ்கட் கொடுத்திருக்கிறார்.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day1 #Promo3 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/FI9OmdYJU0
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 31, 2022