பிக் பாஸ் தர்ஷனை அடைய பாத்தேனா? உன் புருஷன் அப்படி சொன்னார்.. சுஜா வருணியிடம் பொங்கிய வனிதா
வனிதா விஜயகுமார் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக வந்திருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே அவர் பிக் பாஸ் வீட்டில் சண்டை சச்சரவு என பரபரப்பாக மாற்றி இருக்கிறார்.
இந்நிலையில் இன்று சுஜா வருணியிடம் வனிதா ஒரு விஷயத்தை சொல்லி கோபமாக பேசி இருக்கிறார். பிக் பாஸ் 3ல் போட்டியாளராக இருந்தபோது தர்ஷன் மற்றும் ஷெரின் நெருக்கமாக இருப்பதை வனிதா பிரிக்க பார்த்தார், அவர் தர்ஷனை அடைய பார்த்ததால் தான் இப்படி அவர்களை பிரித்துவிட பார்க்கிறார் என சுஜாவருணியின் கணவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
அதை பற்றி தான் இப்போது வனிதா சுஜாவிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். "நான் தர்ஷனுடன் அக்கா தம்பியாக தான் பழகினேன் என எல்லோருக்கும் தெரியும். அதை கொச்சைப்படுத்தி இப்படி உன் புருஷன் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் உன் மீதும் எனக்கு கோபம் இருந்தது" என வனிதா சுஜாவிடம் கூறி இருக்கிறார்.