பிக் பாஸ் voting-ல் அரசியல்வாதி தலையீடு: கொந்தளித்த முன்னாள் போட்டியாளர்
பிக் பாஸ் 6ம் சீசன் இந்த வாரத்தோடு முடியப்போகிறது. அதற்கான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இறுதியில் டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என்பது வார இறுதியில் தான் தெரியவரும்.
நேற்றைய எபிசோடில் கதிரவன் 3 லட்சம் பண மூட்டையை எடுத்துக்கொண்டு ஷோவில் இருந்து வெளியேறினார். அதனால் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பைனலிஸ்ட் ஆக இருக்கிறார்கள்.
அரசியல் தலையீடு
தற்போது பைனலிஸ்ட் ஆக இருக்கும் விக்ரமன் பற்றி நடிகை வனிதா விஜயகுமார் அதிர்ச்சி புகார் ஒன்றை கூறி இருக்கிறார்.
விக்ரமன் உறுப்பினராக இருக்கும் அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தற்போது அவருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
"கட்சி உறுப்பினர்கள் விக்ரமனுக்கு ஆதரவாக ஹாட்ஸ்டாரில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டிருக்கிறார். இதற்கு என்ன சொல்லுவீங்க. இது political stunt. ஒரு அரசியல் தலைவர் மற்றும் MP எப்படி ஒரு ரியாலிட்டி ஷோவில் இப்படி செய்ய முடியும்.. இது அவங்க candidate.. அதனால் தான்" என வனிதா குற்றம்சாட்டி இருக்கிறார்.
முக்கிய இடத்தில் அனுமதிக்கப்படாமல் ரோட்டிலேயே நிற்க வைக்கப்பட்ட நடிகை அமலாபால்- பரபரப்பு சம்பவம்

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan
