பிக் பாஸில் கதறி அழுத வனிதா! அவரா இப்படி என அனைவரும் ஷாக்
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் நடுவில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சண்டை வர தொடங்கி இருக்கிறது. போட்டியாளர்களுக்கு டீ மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தனக்கு காபி வேண்டும் என சொல்லி வனிதா அதிகம் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்காக டீ தூளை எடுத்து ஒளித்து வைத்ததும் அனைவருக்கும் தெரியும்.
இன்று luxury பட்ஜெட்டில் காபி வழங்கப்பட்டது. அந்த காபி டப்பாவை வனிதா எடுத்து சென்று வைத்துக்கொண்டார். அதனால் கோபமான அபிராமி இது உங்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை என சொல்லி சண்டை போட்டார். அபிராமி கோபமாக கப்பை தூக்கிப்போட்டு உடைத்துவிட்டு வேகமாக சென்று வனிதாவிடம் கேட்டார்.
அதற்க்கு வனிதா 'சீ.. தூ.. போடி' என சொல்லி கண்டபடி திட்டினார். அதன் பின் தான் காபியை தொட மாட்டேன் என சொல்லி தூக்கிப்போட்டுவிட்டார் வனிதா. அதன் பின் ஒரு காபிக்கு இப்படி செய்கிறார்களே என சொல்லி வனிதா கதறி கதறி அழுதார்.