கோவப்பட்ட கூல் சுரேஷ்.. கொஞ்சம் கூட அசராத வனிதா மகள், வீடியோ பாருங்க
வனிதா
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே உடனடியாக நினைவுக்கு வரும் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை வனிதா விஜயகுமார்.
அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா செய்த சம்பவங்களை இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியவில்லை.
இவருடைய மகள் ஜோவிகா தற்போது பிக் பாஸ் 7ல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். நிகழ்ச்சி துவங்கி மூன்றாவது நாளான இன்று ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வாக்குவாதங்கள், மோதல் என பரபரப்பை எட்டியுள்ளது பிக் பாஸ் 7.
கோவப்பட்ட கூல் சுரேஷ்
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில், கூல் சுரேஷ் கேமரா பார்த்து பேசிகொண்டே திடீரென கோவப்படுகிறார்.
அவர் சத்தமாக கத்தி பேசவும் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு வினாடி பயந்துவிடுகிறார்கள். ஆனால், வனிதா மகள் ஜோவிகா கொஞ்சம் கூட அசராமல் கூல் சுரேஷை கூலாக பார்க்கிறார்.
இதை கவனித்த ரசிகர்கள், வனிதா மகள்-னா சும்மாவா என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
— Sekar Str (@imsekarstr) October 3, 2023

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
