வனிதாவை ஒதுக்கிவைத்த போட்டியாளர்கள்! பிக் பாஸ் அல்டிமேட்டில் தொடரும் பிரச்சனை
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்து கமல் வெளியேறி இருக்கிறார். அவர் விக்ரம் படத்தில் நடிப்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் கேப்டனாக இருந்த வனிதா கடும் விமர்சனத்தை சந்தித்து உள்ளார்.
இந்த வாரம் கேப்டனை தேர்ந்தெடுக்கும் போட்டி இரண்டு அணிகளுக்கு நடுவில் நடந்து இருக்கிறது. அதில் தாமரை தான் ஜெயித்து இருக்கிறார். அதன் பிறகு வீட்டு வேலைகளை செய்வதற்காக டீம் பிரிக்கும் போது வனிதாவை ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்.
அவர் எந்த டீமிலும் இல்லை என தாமரை சொல்ல, அது அவருக்கு ரொம்ப வசதியாக போய்விடும் என அனிதா சம்பத் கூறுகிறார். ஏற்கனவே அவர் எந்த டாஸ்க்கும் செய்வதில்லை, இனி அவர் டீமிலும் இல்லை என்றால் வேலை கூட செய்யமாட்டார் என அவர் கூறி இருக்கிறார்.
வனிதாவை சுற்றி பிக் பாஸில் தொடர்ந்து பிரச்சனைகளாக வந்து கொண்டிருப்பதால் அவர் விரைவில் எலிமினேட் ஆவாரா என்கிற கேள்வியும் எழுந்து இருக்கிறது.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day22 #Promo2 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/NiuAH8ar2E
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 21, 2022