அடல்ட் கேள்வி கொடுத்த பிக் பாஸ்.. பிபி அல்டிமேட்டில் வெடித்த பெரிய சண்டை
ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசனில் பிரபலமான பல போட்டியாளர்கள் இந்த ஷோவுக்கு வந்திருக்கிறார்கள். இன்று நடந்த ஒரு டாஸ்கில் பிக் பாஸ் சில கேள்விகளை அனுப்பி இருந்தார்.
அந்த கேள்விக்கு 'செய்திருக்கிறேன்' என்றால் பாகற்காய் ஜூஸ் குடிக்கவேண்டும். இல்லை என்றால் சிப்ஸ் எடுத்து குடிக்கவேண்டும் என சொல்லப்பட்டது. அப்போது சில அடல்ட் கேள்விகளும் வந்தன.
ஆணுறையை பலூன் போல் ஊதி இருக்கிறீர்களா, உள்ளாடை போடும் போது கால் தவறி கீழே விழுந்து இருக்கிறீர்களா என்பது போன்ற கேள்விகள் வந்தது. இப்படி பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது, நான் கேமை விட்டு செல்கிறேன் என கிளம்பினார் வனிதா.
அதன் பிறகு பாலாஜி முருகதாஸ் மற்றும் நிரூப் அவரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர் regressive ஆக யோசிக்கிறார் என கூறினார்கள்.
இந்த பிரச்சனை பெரிய வாக்குவாதமாக வெடித்தது. அதன் பிறகு வனிதா மீண்டும் கேமுக்கு வர முற்பட்டால் கேப்டனாக இருக்கும் ஷாரிக் அவரை விடவில்லை.