Condom பற்றி கேள்விகேட்ட போட்டியாளர், கடும் கோபத்தில் வனிதா செய்த விஷயம்- பரபரப்பின் உச்சம்
பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. ஏனெனில் வீட்டில் இருக்கும் அனைவருமே படு அதிரடியான போட்டியாளர்கள், இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் வீடு வீடாகவே இருக்காது.
எனவே இந்த பிக்பாஸ் அல்டிமேட் படு சூடாக இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம், அதற்கு ஏற்றார் போல் சில விஷயங்கள் நடக்கின்றன. குடிக்கணும்-கடிக்கணும் டாஸ்க் போட்டியாளர்களால் விளையாடப்பட்டது.
அதில் தாடி பாலாஜிக்கு கேள்வி வந்தபோது அதை நான் படிக்கமாட்டேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
மற்றவர்கள் அந்த கேள்வியை படித்தார்கள், அதில் காண்டமை பலூன் மாறி ஊதி இருக்கீங்களா? என கேட்டுள்ளனர். இந்த மாதிரி கேள்வி எல்லாம் எனக்கு பிடிக்காது, இதனால் தான் நான் வர மாட்டேன் என்று சொன்னேன். குழந்தைகள் எல்லாம் பார்ப்பார்கள் என்று கூற சுரேஷ் குழந்தைகள் பார்ப்பது இல்லை என்றார்.
பின் நிரூப், இதை ஏன் தப்பாக பார்க்கிறீர்கள்? இது தடை செய்யப்பட்ட டாபிக் கிடையாது. சும்மா ஒரு விளையாட்டுதான் என்று சொல்கிறார். உடனே வனிதா இது என்னுடைய ஒப்பினியன் என்று சொல்கிறார்.
பின் பாலாஜி பொங்கி எழுந்து உங்களுடைய ஒப்பினியன் நான் கேட்கும் போது எங்களுடையதையும் நீங்கள் கேட்கவேண்டும் என்று சொல்கிறார்.
இதில் வனிதாவின் இந்த சண்டைக்கு மக்கள் இடத்தில் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது, கேள்வியை போட்டியாளர்கள் படித்தாலும் அதை கொடுத்தது பிக்பாஸ் தான். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் இந்த செயலை கமல்ஹாசன் கேட்பாரா என்பது தான் மக்களின் சந்தேகமாக உள்ளது.