இதெல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க.. மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த வனிதா
வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற பிறகு மீண்டும் பாப்புலர் ஆனார். தற்போது youtube சேனல், துணி கடை என செம பிசியாக இருந்து வருகிறார். அது மட்டுமின்றி அவர் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் 6ம் சீசன் பற்றியும் தொடர்ந்து விமர்சனங்கள் கூறி வருகிறார்.
சமீபத்தில் விக்ரமனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் ட்விட் செய்து இருந்தார். விக்ரமனுக்கு ஓட்டு போடும்படி அவர் கேட்டு இருந்ததற்கு வனிதா கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அரசியலை entertainmentல் புகுத்தாதீங்க என அவர் கேட்டிருந்தார். வனிதா இப்படி பேசியதற்கு அதிகம் மிரட்டல்கள் வந்ததாக வனிதா புகார் கூறி இருக்கிறார்.

பதிலடி
அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கும் வனிதா "யாருக்கும் எதுக்கும் பயந்தவ நான் இல்லை. உங்க அரசியல் புத்தி என்னனு காலம் காலமாக பாத்திருக்கோம்."
"உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க" என வனிதா பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இயக்குனர் லிங்குசாமிக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?- அதுவும் Rjவாக உள்ளாரா?