முன்னணி ஹீரோ படத்தில் நடித்திருக்கும் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி! எந்த படம் தெரியுமா?
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் மூலமாகி அவரது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கினார். அவர் தற்போது சினிமா, டிவி, youtube என தொடர்ந்து பிசியாக இருந்து வருகிறார்.
வனிதாவுடன் அவரது இரண்டு மகள்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும் வனிதா தொடர்ந்து அவரது மகன் விஜய் ஸ்ரீ ஹரி பற்றி உருக்கமாக பேசி வருகிறார். பிக் பாஸ் வீட்டிலேயே அவரை பற்றி பேசி இருந்தார் வனிதா.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தன் மகன் போட்டோவை வெளியிட்டு அவரது 21வது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி இருந்தார் அவர்.
வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி பற்றி பலருக்கும் தெரியாத தகவல் என்னவென்றால் அவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது தான். அவர் கார்த்தியின் சகுனி படத்தில் சின்ன வயது கார்த்தியாக திரையில் தோன்றி இருப்பார்.
தற்போது விஜய் ஸ்ரீ ஹரி சினிமா பற்றிய படிப்பை தான் படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.