கமல் பேசியே ஆகனும்.. ஜோவிகாவை வைத்து அவர் மேல கேஸ் போடுவேன்! வனிதா அதிரடி
பிக் பாஸ் 7ம் சீசனில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி திடீரென வெளியேற்றப்பட்டது பற்றி நெட்டிசன்கள் மாயா - பூர்ணிமா கேங்கை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி விஜய் டிவி மற்றும் கமல்ஹாசனையும் விமர்சித்து வருகிறார்கள்.
வனிதாவின் மகள் ஜோவிகாவும் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கவேண்டும் என பேசி இருந்தார் என்பதால் அவரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
வனிதா பேட்டி
இந்நிலையில் வனிதா இந்த சர்ச்சை பற்றி பேசும்போது ஜோவிகாவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். ஜோவிகா அப்படி பேசவே இல்லை, ரெட் கார்டு கொடுத்ததற்காக காரணம் பற்றி கமல் ஹாசன் இந்த வாரம் விளக்க வேண்டும், இல்லை என்றால் நான் வழக்கு தொடருவேன்.
ஜோவிகாவுக்கு 18 வயது ஆகிவிட்டது. அவள் வந்து வழக்கு தொடர்வாள் என வனிதா ஆவேசமாக கூறி இருக்கிறார்.

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
