இளையராஜாவுக்கு வேற வேலை இல்லையா, நான் காசு கொடுத்திருக்கேன்: கொந்தளித்த வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் சமீபத்தில் மிஸஸ் & மிஸ்டர் என்ற படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த படத்தில் இளையரராஜாவின் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நான் இளையராஜா வீட்டுக்கு சென்று பேசிவிட்டு, அனுமதி வாங்கி படத்தில் பாடலை பயன்படுத்தினேன். அப்போதே சொல்லி இருக்கலாமே. நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளாக சென்றிருக்க வேண்டியவள் என வனிதா முன்பு கூறி இருந்தார்.
இளையராஜாவுக்கு வேற வேலை இல்லையா..
இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த வனிதா செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசி இருக்கிறார்.
"நான் வரும்போது கேப்-ல தான் வந்தேன், அதன் டிரைவர் என்னை பார்த்ததும் 'இளையராஜாவுக்கு வேற வேலை இல்லையா' என கேட்டார். இவர் செய்வது இப்படி தான் வெளியில் பேசப்படுகிறது."
நான் கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுத்து இருக்கிறேன். பணம் கொடுத்து ரைட்ஸ் வாங்கி தான் நான் பாடலை பயன்படுத்தி இருக்கிறேன். நான் ஏன் நீக்க வேண்டும். எனக்கு உரிமை இருக்கு.
இளையராஜா போட்டோவை போட்டு நன்றி என டைட்டில் கார்டில் போட்டதற்காக என்னிடம் பணம் கேட்கிறார்கள் என வனிதா ஆவேசமாக பேசி இருக்கிறார்.