வனிதா விஜயகுமார் இப்படியொரு தொழில் செய்கிறாரா! பல லட்சம் வருமானம் வருகிறதாம்
வனிதா விஜயகுமார்
திரையுலகில் மிகவும் பிரபலமான வனிதா விஜயகுமார். மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த இவர் சில பிரச்சனைகள் காரணமாக தனது தந்தையை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பதை நாம் அறிவோம்.
சமீபத்தில் நடந்த பிக் பாஸ் சீசன் 7 வனிதா மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்று இருந்தார். பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜோவிகா தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் என கூறப்படுகிறது. அண்மையில் கூட அவருடைய போட்டோஷூட் வீடியோ ஒன்று வெளிவந்திருந்தது.
இப்படியொரு தொழில் செய்கிறாரா
நடிகை வனிதா விஜயகுமார் Youtube மட்டுமின்றி வேறொரு தொழிலும் செய்து வருகிறாராம். ஆம், சொந்தமாக துணிக்கடை ஒன்றை வனிதா விஜயகுமார் நடத்தி வருகிறாராம். விவி ஸ்டைலிங் என்ற பெயரில் கடை ஒன்று இயங்கி வருகிறதாம்.
பல லட்சம் வருமானம்
இந்த கடையில் துணிகள் மட்டுமின்றி மேக்கப் பொருட்களும் கிடைக்கிறது என கூறப்படுகிறது. இந்த கடையில் விற்கப்படும் அனைத்து ஆடைகளும் வனிதா வடிவமைத்த ஆடைகள் தானாம். வனிதா விஜயகுமார் பேஷன் டெக்னாலஜியில் டிப்ளமோ படித்து முடித்துள்ளாராம். மேலும் பி. வாசு இயக்கிய சில திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு சொந்தமான விவி ஸ்டைலிங் கடைசியின் மூலம் நடிகை வனிதா விஜயகுமார் பல லட்சங்களில் வருமானம் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
