ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க வனிதா விஜயகுமார் செய்யும் விஷயம் என்ன தெரியுமா?
வனிதா விஜயகுமார்
பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்து நாயகியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். சில படங்களே ஆரம்பத்தில் நடித்த இவர் பின் சினிமா பக்கம் காணவில்லை.
பின் விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் சினிமாவில் நுழைந்து இப்போது கலக்கி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், சீரியல்களில் சிறப்பு வேடம், படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார்.
இதுதவிர சொந்தமாக நிறைய தொழில்களும் செய்து வருகிறார்.
உடல் எடை
உடல் எடை குறைக்க முடிவு செய்ததும் வெள்ளை உணவுகளான அரிசி, சர்க்கரை, பால், தயிர் போன்றவற்றை சுத்தமாக நிறுத்திவிட்டாராம்.
வெறும் வயிற்றில் பாகற்காய் ஜுஸ் குடிப்பது உடல் எடையை குறைக்க மிகவும் உதவுமாம். உடலில் இருக்கும் கொழுப்பு, தொப்பையை குறைக்க வெந்நீரில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பாராம்.
3 வேளை உணவை 6 வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவாராம்.
தானிய வகைகளான பிரவுன் ரைஸ், கம்பு, குதிரைவாலி, ராகி போன்ற உணவுகளை இரவில் எடுத்துக் கொள்வாராம்.
2வது நாளிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பிய உதயநிதியின் மாமன்னன்- செம வசூல்