குக் வித் கோமாளி 5க்கு வரப்போகும் சர்ச்சை பிரபலம்.. அவரே போட்ட பதிவு
விஜய் டிவியில் குக் வித் கோமாளி 5ம் சீசன் விரைவில் தொடங்குகிறது. ஷோவின் ப்ரொமோவை ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர். அதில் செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பதில் நடுவராக நடிகர் மாதம்பட்டி ரங்கராத் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தார்.
மேலும் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என உத்தேச பட்டியல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதில் பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் சிலரும் வர இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
வனிதா வருகிறாரா?
பிக் பாஸ் 7ல் போட்டியாளராக கலந்துகொண்ட ஜோவிகா குக் வித் கோமாளிக்கு போட்டியாளராக வருகிறாரா என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு வனிதா பதில் அளித்து இருக்கிறார்.
"ஜோவிகா பிஸி dates இல்லை.. ஆனால் என்னை expect பண்ணலாம்" என வனிதா கூறி இருக்கிறார்.
அனைத்தையும் ஓப்பனாக பேச கூட வனிதா குக் வித் கோமாளிக்கு வந்தால் நிச்சயம் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.