ஓவியா போல ரகளை செய்து வெளியேறிய வனிதா! பிக் பாஸ் அல்டிமேட்டில் அதிர்ச்சி சம்பவம்
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்து இன்று வனிதா விஜயகுமார் வெளியேறி இருக்கிறார். அது ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிக் பாஸ் அல்டிமேட் ஷோ பரபரப்பாக இருக்க காரணமான வனிதா தற்போது வெளியேறி இருப்பதால் இனி வீட்டில் சண்டைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வீடியோவில் வனிதா 'கதவை திறங்க பிக் பாஸ்..' என தொடர்ந்து ரகளை செய்கிறார். அதனால் அவரை பிக் பாஸ் கன்பெக்ஷன் ரூமுக்கு அழைத்து பேசுகிறார்.
'என்னுடைய mental health மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு நான் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை, எதுவாக இருந்தாலும் நான் வெளியில் வந்து பார்த்துக்கொள்கிறேன். நான் தானாக முன்வந்து இந்த ஷோவில் இருந்து வெளியேறுகிறேன்" என கூறுகிறார்.
இது தான் உங்கள் இறுதி முடிவா என பிக் பாஸ் கேட்க, ஆம் என உறுதி செய்திருக்கிறார். அதனால் வனிதா வெளியேறலாம் என அப்படியே கன்பெக்ஷன் ரூம் வழியாக வெளியில் அனுப்பி வைத்திருக்கிறார் அவர்.
இந்த ப்ரோமோ பிக் பாஸ் அல்டிமேட் ஷோ ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வனிதா மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
#BBUltimate இல்லத்தில் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 23, 2022
▶️12 pm onwards..#Day24 #Promo1 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/YJPNayfWnV