அரசியலுக்கு வருகிறாரா வனிதா விஜயகுமார்? அவரே சொன்ன பதில்

By Parthiban A Nov 05, 2026 03:57 PM GMT
Report

நடிகை வனிதா விஜயகுமார் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. பிக் பாஸ் சர்ச்சைகள் தொடங்கி அவரது மூன்றாவது திருமண சர்ச்சை வரை பலவும் பெரிய அளவில் பேசப்பட்ட ஒன்று.

தற்போது வனிதா படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பிசியாக நடித்து வருகிறார்.

அரசியலுக்கு வருகிறாரா வனிதா விஜயகுமார்? அவரே சொன்ன பதில் | Vanitha Vijayakumar Reply On Entering Politics

அரசியலுக்கு வருவேனா?

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் வணிதாவிடம் 'நீங்கள் அரசியலுக்கு வருங்காலத்தில் வருவீர்களா?' என கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பதில் சொன்ன அவர், "பிரபலமாக இருந்தால் அரசியலுக்கு வந்துவிடலாம் என்றில்லை. அதை தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கிறது அரசியலில்."

"ரொம்ப knowledge வேண்டும். ரொம்ப dedication வேண்டும். நேரம் ஒதுக்க வேண்டும். உங்களை அதிலேயே அர்ப்பணிக்க வேண்டும். அதற்க்கு நான் தயாராக இல்லை."

"எனக்கு வாழ்க்கை இருக்கிறது. எனக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை செட்டில் செய்ய வேண்டும். குடும்பத்தை வெச்சிக்கிட்டு அரசியலுக்கு வருவது சாத்தியம் இல்லை என நினைக்கிறேன்" என வனிதா கூறியுள்ளார்.

அரசியலுக்கு வருகிறாரா வனிதா விஜயகுமார்? அவரே சொன்ன பதில் | Vanitha Vijayakumar Reply On Entering Politics

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US