இளையராஜாவுக்கு வனிதா பதிலடி.. அவர் வீட்டுக்கு மருமகளாக போக வேண்டியவள் நான்
நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா தயாரிப்பில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் இன்று திரைக்கு வந்தது.
அந்த படத்தில் ராத்திரி சிவராத்திரி என்ற பாடலை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக தற்போது இளையராஜா வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அந்த பாடலை உடனே நீக்க வேண்டும் என கேட்கப்பட்டு இருக்கிறது.
காட்டமான பதிலடி
இந்நிலையில் வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில் மக்கள் தனது படத்தை வந்து பார்க்க வேண்டும் என கண்ணீருடன் பேசி இருக்கிறார்.
மேலும் இளையராஜாவுக்கும் காட்டமான பதிலடி கொடுத்து இருக்கிறார்.
"இளையராஜாவிடம் இந்த பாடலை பயன்படுத்த தனிப்பட்ட முறையில் பேசினேன். என் மகள் உடன் சென்று அவர் காலில் விழுந்தேன். ஓகே என்று தான் சொன்னார். அதன் பின் சோனி நிறுவனத்திடம் அனுமதி வாங்கினேன்."
"நான் நேரில் சென்று கேட்கும்போதே திட்டி இருக்கலாமே, இப்போ வந்து வழக்கு மட்டும் போடுறீங்களே" என வனிதா காட்டமாக பேசி இருக்கிறார்.
மேலும் இளையராஜா குடும்பத்துடன் இருக்கும் பிணைப்பு பற்றியும் வனிதா கண்ணீருடன் பேசினார். சின்ன வயதில் இருந்தே நான் அவரது வீட்டில் வளர்ந்திருக்கிறேன். அவர் வீட்டுக்கு நான் மருமகளாக போக வேண்டியவர் எனவும் வனிதா கூறி இருக்கிறார்.


ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
