ஏற்கனவே அப்பா என்னிடம் பேசுறதில்லை.. நீங்க வேற போட்டு கொடுக்குறீங்க! புலம்பிய வனிதா
பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் போட்டியாளராக வந்திருக்கிறார் வனிதா விஜயகுமார். எதிர்பார்த்தது போலவே அவர் முதல் நாளிலேயே அவர் சண்டையை வீட்டில் தொடங்கிவிட்டார். சண்டை ஒருபுறம் இருக்கட்டும்.. ஒரு டாஸ்கில் வனிதா சொன்ன விஷயம் தான் இந்த செய்தியின் நியூஸ்.
எதாவது தவறு இதற்கு முன் செய்திருந்தால் அது பற்றி ஆம்/இல்லை என சொல்ல வேண்டும் என கூறப்பட்டது. வனிதா பாகற்காய் ஜூஸ் குடிப்பதில் இருந்து தப்பிப்பதற்காக பதிலை மாற்றி மாற்றி பொய் சொல்லி கொண்டிருந்தார்.
அந்த டாஸ்கில் முதல் கேள்வியே "உங்கள் அப்பாவின் சரக்கை திருடி குடித்திருக்கிறீர்களா?' என்பது தான். அதற்கு பதில் சொன்ன வனிதா "என் அப்பா ஏற்கனவே என்னிடம் பேசுவதில்லை.. நீங்க வேற போட்டு தரீங்களா" என காமெடியாக கேட்டார்.