கஷ்டத்தில் இருக்கும் யாஷிகாவிற்கு, வனிதா விஜயகுமார் சொன்னதை கேட்டீர்களா?
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு பரீட்சயமான முகமாக மாறியவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இவர் தனது நண்பர்களுடன் அண்மையில் வெளியூர் சென்றுவிட்டு சென்னை திரும்பும் போது பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே யாஷிகா தோழி உயிரிழந்தார்.
மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். யாஷிகாவிற்கு 2, 3 சர்ஜரி எல்லாம் நடந்தது, 6 மாதம் ஓய்வில் அவர் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
யாஷிகா தன்னால் தனது தோழி இறந்துவிட்டார் என வருத்தப்பட்டு ஒரு பதிவு போட்டார். அதைப்பார்த்த நடிகை வனிதா, இதெல்லாம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும், அதனால் தான் அது விபத்து.
இதற்கு உன்னை நீ குற்றம் சுமத்திக்கொள்ளாதே என ஆதரவாக பேசியுள்ளார்.
