படையப்பா படத்தின் கதை பிடிக்கவில்லை, அதனால் நிராகரித்தேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்
படையப்பா
சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்று படையப்பா. இப்படத்தை இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் ரஜினிக்கு இணையான மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் சௌந்தர்யா, லட்சுமி, மணிவண்ணன், செந்தில், நாசர், அப்பாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

வனிதா
இப்படத்தில் ரஜினியின் இரண்டு மகள்களில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை ப்ரிதா ஹரி. ஆனால், முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நடிகை வனிதா தானாம்.

இதுகுறித்து அவரே பேட்டியில் கூறியுள்ளார், "படையப்பா திரைப்படத்தில் முதன் முதலில் ரஜினியின் மகளாக நடிக்க இருந்தது நான் தான். நான் நடிக்க மறுத்துவிட்டேன், அதன்பின் என் தங்கை பிரித்தாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது, அவ நடிச்சிருந்தா. கதை கேட்டப்போ சுத்தமா எனக்கு பிடிக்கவில்லை. ஹீரோயின் ரோலுக்கு கூப்பிட்டு இருந்தா ஒருவேளை நடித்திருப்பேன்" என கூறியுள்ளார்.
ரீ ரிலீஸ்
கடந்த ஆண்டு படையப்பா ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ரீ ரிலீஸில் மட்டுமே ரூ. 18 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri