61 வயது நடிகருடன் இணையும் நடிகை வரலட்சுமி சரத்குமார் - கதாநாயகியா? வில்லியா?
ஹீரோயினாக மட்டுமல்லாமல் துணிச்சலாக முன்னணி நடிகர்களுக்கு இணையாக வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது.
இந்நிலையில் பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்க உள்ளதாம்.
இப்படத்தில் வரலட்சுமி நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது வில்லியாக நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.