வரலாறு முக்கியம் திரைவிமர்சனம்
ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் வரலாறு முக்கியம். காஃபி வித் காதல் படத்திற்கு பிறகு ஜீவா நடிப்பில் இப்படம் வெளிவந்துள்ளது. துள்ளலான ஜீவாவை திரையில் காண காத்திருந்த ரசிகர்களுக்கு வரலாறு முக்கியம் திரைப்படம் எப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை கொடுத்துள்ளது என்பதை வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..
கதைக்களம்
கோயம்புத்தூரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் கதாநாயகன் ஜீவா {கார்த்தி } சொந்தமாக youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சமயத்தில் ஜீவாவின் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு மலையாள குடும்பம் குடியேருகிறது.
இந்த குடும்பத்தில் இருக்கும் இரு இளம் பெண்கள் காஷ்மிரா மற்றும் பிரக்யா. இதில் கதாநாயகன் ஜீவா அக்கா காஷ்மிராவை காதலிக்கிறார். தங்கை பிரக்யா ஜீவாவை காதலிக்கிறார்.
ஆனால், காஷ்மீரின் அப்பா தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கு மட்டுமே கட்டிக் கொடுப்பேன் என உறுதியுடன் இருக்கிறார்.இறுதியில் யாருடன் ஜீவா இணைந்தார் என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
சிவா மனசுல சக்தி படத்திற்கு பின் துள்ளலான ஜீவாவை இப்படத்தில் பார்க்க முடிந்தது. காதல், நகைச்சுவை என இருந்தாலும், அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைத்துள்ளனர்.
சில காட்சிகள் ரசிகர்களை கவரும் வண்ணம் இருந்ததால், படத்தை சகித்துக்கொண்டு பார்த்தார்கள் ரசிகர்கள். காஷ்மிரா மற்றும் பிரக்யா இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளனர்.
விடிவி கணேஷ் நடிப்பு ஓகே. சந்தோஷ் ராஜனின் இயக்கம் சுமார். திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. ஷான் ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு பலம். ஒளிப்பதிவு சூப்பர். எடிட்டிங் ஓகே.
பிளஸ் பாயிண்ட்
ஜீவாவின் நடிப்பு
பின்னணி இசை, ஒளிப்பதிவு
சில நகைச்சுவை காட்சிகள்
மைனஸ் பாயிண்ட்
திரைக்கதையில் சுவாரசியம் இல்லை
காலம் காலமாக பார்த்து சலித்துப்போன கதைக்களம்