நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரை கால்களால் மிதி மிதினு மிதித்த பிரபல நடிகர்.. உடைந்த எலும்பு.. இயக்குனர் பாலா செய்த செயல்
வரலக்ஷ்மி சரத்குமார்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவருக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் தான் வரலக்ஷ்மி சரத்குமாருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட வெளிவந்து இணையத்தில் வைரலானது.
நடிகை வரலக்ஷ்மி பல சவால்கள் நிறைந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அதில் ஒன்று தான் தாரை தப்பைட்டை படத்தில் அவர் நடித்திருந்த சூறாவளி எனும் கதாபத்திரமும்.
உடைந்த எலும்பு
இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிகை வரலக்ஷ்மியை கால்களால் மிதிப்பது போல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த காட்சி எடுப்பதற்கு முன் ஆர்.கே. சுரேஷிடம் 'பாத்து மிதி டா' என கூறியுள்ளார் வரலக்ஷ்மி.
ஆனால், அதையெல்லாம் கேட்காமல் நன்றாக மிதி மிதினு மிதித்துள்ளார் ஆர்.கே. சுரேஷ். அப்போது வரலட்சுமியின் எலும்பு முறிந்துவிட்டதாம். அந்த சந்தம் கேட்டபோதும் கூட காட்சியை கட் செய்ய சொல்லாமல் தொடர்ந்து நடித்துள்ளார் வரலக்ஷ்மி.
அப்போது வரலக்ஷ்மியின் நடிப்பை பார்த்து வியப்பில் ஆழ்ந்த இயக்குனர் பாலா, தனது கழுத்தில் இருந்த தங்க செயினை வரலக்ஷ்மி கழுத்தில் போட்டாராம்.
அதன்பின், 'சார் மிதித்த இடத்தில் எலும்பு முறிந்துவிட்டது, பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று வருகிறேன்' என கூறிவிட்டு சென்றாராம் வரலக்ஷ்மி.
இந்த தகவலை பேட்டி ஒன்றில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
