நடிகை வரலட்சுமியின் கணவர் நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?... வெயிட்டு தான்
வரலட்சுமி
நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சிம்புவின் போடா போடி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி.
இப்படத்திற்கு முன் பாய்ஸ், காதல் போன்ற படங்களில் வரலட்சுமி நடிப்பதாக இருந்தது, ஆனால் சரத்குமார் சம்மதம் தெரிவிக்காததால் பட வாய்ப்புகளை மிஸ் செய்துள்ளார்.
நாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அவர் நடித்த படங்களில் மாரி 2, விக்ரம் வேதா, சர்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. கொஞ்சம் குண்டாக இருந்த வரலட்சுமி அதிரடியாக உடல் எடை குறைத்து இப்போது ஆளே மாறிவிட்டார்.
நிக்கோல் சொத்து
படு பிஸியாக படங்கள் நடித்துவந்த வரலட்சுமி திடீரென தனது நிச்சயதார்த்த புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது வரலட்சுமிக்கு 39 வயது ஆகிறது, இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோல் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.
இவர் கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றார், பின் சில காரணங்களால் விவாகரத்தும் பெற்றார். வரும் ஜுலை 2ம் தேதி தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாம்.
இந்த நிலையில் நடிகர் நிக்கோல் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது. நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 85 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலி; உண்மை காரணம் என்ன? கேட் கீப்பர் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamilnadu

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
