எலும்பு நொறுங்கிடுச்சு.. பாலா ஷூட்டிங்கில் நடந்த அதிர்ச்சி! பிரபல நடிகை சொன்ன ஷாக் தகவல்
இயக்குனர் பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களை அடிப்பார் என பல முறை சர்ச்சைகள் வந்திருக்கிறது. வணங்கான் படத்தின் ஷூட்டிங்கில் பாலா என்னை அடித்துவிட்டார் என நடிகை மமிதா பைஜூ என்பவர் அளித்த பேட்டி சர்ச்சை ஆனது.
நான் கொடுத்த பேட்டியில் ஒரு சின்ன பகுதியை மட்டும் வெட்டி வைரலாக்கி விட்டார்கள் என அவர் பின்னர் விளக்கம் கொடுத்தார்.
வரலக்ஷ்மி
பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் வரலக்ஷ்மி ஹீரோயினாக நடித்து இருந்தார். அதில் ஒரு காட்சியில் வில்லன் ஆர்கே சுரேஷ் வரலட்சுமியை மிதிப்பது போல காட்சி இருக்கும்.
ஷூட்டிங்கில் RK சுரேஷ் மிதித்ததில் வரலக்ஷ்மியின் collar boneல் கிராக் ஆகி விட்டதாம். அந்த சத்தம் கேட்டு ஷாக் ஆனாலும் அவர் தொடர்ந்து நடித்து இருக்கிறார். நிறுத்திவிட்டால் திரும்ப வந்து நடிக்க சொல்வார் பாலா என்கிற பயம் தான். கட் சொன்ன பிறகு பாலாவிடமும் சொல்லாமல் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.
ஹாஸ்பிடலுக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது தான் எலும்பு நொறுங்கி இருப்பது தெரிந்தது என வரலக்ஷ்மி அளித்த ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
