ஜெனிலியா இல்லை.. பாய்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபல ஹீரோவின் மகள்! யார் தெரியுமா
பாய்ஸ்
ஷங்கரின் இயக்கத்தில் 2003ல் வெளிவந்த படம் பாய்ஸ். அதில் நடித்த ஜெனிலியா, சித்தார்த், நகுல், தமன் என பலரும் அதற்குப்பின் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெனிலியாவுக்கு தமிழில் இது முதல் படம் தான். அதற்கு முன்பே ஒரே ஒரு இந்தி படத்தில் நடித்து இருந்தார் . பாய்ஸ் படம் அவரை மிகப்பெரிய அளவில் தென்னிந்திய சினிமாவில் வைரல் ஆக்கியது.
வரலக்ஷ்மி
ஆனால் முதலில் அந்த ரோலில் சரத்குமார் மகள் வரலக்ஷ்மி தான் ஹீரோயினாக நடிக்க இருந்தாராம். ஆடிஷன் எல்லாம் நடத்தி ஷங்கர் அவரை தேர்வு செய்திருக்கிறார்.
ஆனால் சரத்குமார் ஓகே சொல்லவில்லையாம். ஷங்கர் தொடர்ந்து பல முறை கேட்டும் சரத்குமார் முடியாது என கூறிவிட்டாராம். அதற்கு பிறகு தான் ஜெனிலியாவை நடிக்க வைத்தாராம் ஷங்கர்.

