காசு இல்லாதவங்களுக்கு குழந்தை எதுக்கு?: நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக ஹைதராபாத்திலேயே புது வீட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது எஸ் சரஸ்வதி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ப்ரோமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை அவர் கொடுத்து வருகிறார். அப்படி அவர் அளித்த பேட்டி ஒன்றில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது பற்றி பேசி இருக்கும் விஷயம் சர்ச்சை ஆகி இருக்கிறது.

காசு இல்லாம எதுக்கு உங்களுக்கு குழந்தை
"நம் நாட்டில் யாரும் *க்ஸ் பற்றி பேச விரும்புவதில்லை. ஆனால் மக்கள் தொகையில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். தொழிற்சாலை போல குழந்தைகளை பெற்று தள்ளுகிறார்கள்."
"காசு இல்லாமல் எதற்கு குழந்தை பெற்றுக்கொள்கிறீர்கள். நிதி ஆதாரத்தை திட்டமிட்டுவிட்டு அதன் பின் குழந்தை பற்றி திட்டமிடுங்கள்."
"குழந்தைக்காக உதவி கேட்டு என்னிடம் வருகிறார்கள். நானா பெற்றேன்.. நீங்கள் செய்த தவறுக்கு நான் உதவனுமா. உங்க குழந்தையை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். அந்த அளவுக்கு காசு இருந்தால் மட்டும் குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள்" என வரலக்ஷ்மி கூறி இருக்கிறார்.

Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லை முறையைக் கைவிடுக... விமான நிலைய நிர்வாகிகள் கோரிக்கை News Lankasri