4 மாதங்களில் அதிக வெயிட் லாஸ் செய்ய நடிகை வரலட்சுமி செய்த 4 விஷயங்கள்... சூப்பர் டிப்ஸ்
வரலட்சுமி
நடிகை வரலட்சுமி சரத்குமார், தமிழ் திரையுலகில் முக்கிய நாயகிகளில் ஒருவராக இருப்பவர்.
போடா போடி படம் மூலம் நடிக்க தொடங்கினார், கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் உள்ளார். எல்லா நடிகைகளையும் தாண்டி இவரிடம் ஸ்பெஷல் என்றால் வேகமாக டயலாக் பேசும் நடிகையாக வலம் வருகிறார்.
ஹீரோயின் என்பதை தாண்டி தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து அசத்துகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு உடல் எடையை சுத்தமாக குறைத்தவர் அண்மையில் தனது காதலரை திருமணமும் செய்து முடித்தார்.
வெயிட் லாஸ்
தனது உடல் எடையை குறைக்க வரலட்சுமி 4 விஷயங்களை முக்கியமாக செய்தாராம். உடற்பயிற்சி, High Intensity Workout செய்வாராம். தனக்கான வேலைகளை தானே செய்து கொண்டாராம்.
தினசரி உடற்பயிற்சி செய்தது மட்டுமன்றி ஆக்டிவான வாழ்க்கை முறையையும் பின்பற்றியுள்ளார். பின் யோகாசனமும் வழக்கமாக செய்து வந்துள்ளார்.
உடற்பயிற்சி மட்டுமின்றி ஹெல்தி உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.