தன்னை பற்றி பரவும் பொய் செய்தி.. சர்ச்சைக்கு வரலக்ஷ்மி கோபமாக கொடுத்த பதிலடி

By Parthiban.A Mar 14, 2024 12:00 PM GMT
Report

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்த தான் அவர் அந்த முடிவை எடுத்தார்.

மேலும் வரலக்ஷ்மிக்கு அவரது காதலர் Nicholai Sachdev என்பவர் உடன் சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் வரலக்ஷ்மியின் உதவியாளராக இருந்த ஆதிலிங்கம் என்பவர் போதைப்பொருள் வழக்கில் கடந்த வருடம் கைதான நிலையில், அந்த வழக்கு தொடர்பாக NIA வரலட்சுமியை விசாரணைக்காக அழைத்திருப்பதாக கடந்த வருடமே செய்தி பரவியது.

தன்னை பற்றி பரவும் பொய் செய்தி.. சர்ச்சைக்கு வரலக்ஷ்மி கோபமாக கொடுத்த பதிலடி | Varalaxmi Sarathkumar Slams Fake News About Her

வதந்திக்கு பதிலடி

இந்நிலையில் இந்த பழைய செய்தியை தற்போது மீண்டும் மீடியாக்களில் வரலக்ஷ்மி கைதாகிவிட்டார் என பொய்யான செய்தி பரவி வருகிறது. மேலும் அவரை காப்பாற்ற தான் அப்பா சரத்குமார் பாஜகவில் கட்சியை இணைத்தாரா எனவும் சமூக வலைத்தளங்களில் பலவிதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இதை பார்த்து கோபமான வரலக்ஷ்மி இன்ஸ்டாவில் பொய் செய்தி பரப்புபவர்களை விளாசி இருக்கிறார். 'நாட்டில் இதை விட முக்கியமான 1000 பிரச்னைகள் இருக்கிறது. என்னுடைய அமைதியை weakness என எடுத்துக்கொள்ளாதீர்கள். மானநஷ்ட வழக்கு போடுவதும் ட்ரெண்ட் ஆகி வருகிறது' என எச்சரித்து இருக்கிறார்.  


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US